Sunday, July 22, 2012

திருவிழாக் குழந்தை.


திருவிழாவில் 
குழந்தையை தவற விட்ட
தாயாய் நான்.
யாரோ கொடுத்த
மிட்டாயொன்றை  
கையில் வைத்தபடி
எங்கோ சிரித்துக் கொண்டிருக்கிறாய்.
தின்று முடித்தபின் 
எனைத் தேடி
அழத்தானே போகிறாய். 


1 comment:

Anonymous said...

Magnificent! (As usual. :-P )