அறை மூலையின்
கண்ணாடி ஜாடிக்குள்
இரு சந்தோஷ மீன்கள்.
அவ்வறையின் வெளிர்நீல பூச்சு பற்றியோ,
ஆடை கலைந்துறங்கும் முதிர்கன்னி பற்றியோ,
பாசி படர்ந்த அவ்வீடு,
இரவை உருக்கி ஊற்றிய அவ்வூர்,
எல்லைசாமியின் நிரந்தர கோபம்,
அதற்கப்பால் ரம்மிய வானம்,
கடல் சூழ் உலகு,
அதை தாண்டிய
ஆகாயம்
அண்டம்
பால்வளி
பிரபஞ்சம்
பற்றியோ அவற்றிற்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தெரிந்து கொள்ள வேண்டிய
பிரஞ்ஞையும் இல்லை.
நீ. நான்.
உன் மீதான
என் காதல்.
No comments:
Post a Comment