Saturday, June 9, 2012

பிறிதொரு நாளில்..


எப்போதோ சென்ற
சுற்றுலா கடற்கரையின்
ஞாபகங்கள்
வடிந்து விட்ட போதும்,
பிறிதொரு நாளில்
கால்சட்டைப் பையில்
தட்டுப்படும்
எஞ்சிய மணலைப் போல
உன் காதல்...


No comments: