1.அம்மா அப்பா வச்ச பேர மொதல்ல மறங்க ..புனை பெயர் ஒன்ன தேடி புடிங்க . தமிழ், ஆங்கிலம், ஹிந்தி கலந்தவாறு. சற்றே Fancyயாக இருந்தால் சாலச் சிறந்தது. முன்னாடி ,பின்னாடி, நடுவுல ரைட்டர் சேத்துக்கலாம்.
2.முதற்படியாக கவிதைங்கற பெயரில் எதாவது எழுதி புள்ளையார் சுழி போடணும்.. அப்புறம் இருக்கிற எல்லா தமிழ் திரட்டிகள்ளேயும் மாத்தி மாத்தி பதிவு செய்யணும் .. அம்மா தாயே ஓட்டு போடுங்ககிறதெல்லாம் அப்போறம்.
3.நல்லா போஸ்டோ, மொக்க போஸ்டோ , ஏற்கனவே இணையத்தில் பார்மாகி இருக்கிற பிரபல பதிவர்கள் எல்லாத்துக்கும் கமென்ட் போடுங்க .. அப்பத்தான் நாலு பேருக்கு நம்ம பத்தி தெரிய வரும் ... மறக்காம "பர்ஸ்ட் கமெண்ட் நாந்தேன்" வகையறா.. அப்புறம் ஒரு ஸ்மைலி .
4.மிக முக்கியமாக முகபுத்தகம், ட்விட்டர் எல்லாத்துலயும் சேந்து மொரட்டுத்தனமா எதையாவது போஸ்ட் பண்ணிகிட்டே இருங்க .. காசா பணமா... பண்ணுங்க பாஸு... தெரிஞ்சவன், தெரியாதவன் , லைக் பண்ணவன் , ரீட்வீட் பண்ணாதவன் ,அம்மி மிதிச்சவன், ஓல சந்துல எட்டி பாத்தவன் இப்புடி எல்லாரையும் Follow பண்ணனும் .. கொஞ்சம் ஏரியா ரவுடி ஆனதுக்கபுறமா Unfriend,Unfollow பண்ணிக்கலாம் .
5.துரோகம் நடந்தது என்ன ?, யாருக்கு யாரோ , இன்னிசை காவலன்,பட்டு வண்ண ரோசாவாம் இப்படி ஒரு படத்த விட கூடாது .. மொத ஆளா விமர்சனம் எழுதனும் ...நல்லா படத்த மொக்கயினும், படு மொக்கையான படத்த கேமரா ஆங்கிள்காக ஒரு தடவ பாக்கலாம்னும் சொல்லுங்க ..எதுவுமே புரியலான கூட இந்தி , தெலுகு, கன்னடா, போஜ்புரி படத்துக்கு கூட அப்பப்ப
Review எழுதனும்
6.சில மாசத்துக்கு ஒரு தடவ முலை,புட்டம்,யோனி,குறி,குதம்னு எதையாவது ஒன்ன எடுத்துக்கிட்டு கவுஜ ...ச்சீ ...கவிதை எழுதனும்.. இல்ல கற்பு, பிரேசியர், நைட்டின்னு ட்வீட் ஆச்சு பண்ணுங்க .இல்லனா எலக்கியவாதினு உங்கள சென்மத்துக்கும் ஏத்துக்க மாட்டாங்க .. பாத்து சூதனமா நடந்துகோங்க ....
7.அதே மாதிரி வருஷம் ஒருவாட்டி நடக்கிற பதிவர் வட்ட சண்டையில தவறாம கலந்துக்கனும் .. கலந்துகிட்டு .... கபடி கபடி ன்னு ரெண்டு போஸ்ட சப்போர்ட் பண்ணியோ , எதிர்த்தோ போட்டுடனும் ... இல்லனா ஊர விட்டு ஒங்கள தள்ளி வச்சுருவாங்க ..
8.விசய், சாரு, கங்குலி, கலைஞ்சர் ..... ரசினி, ஜெமோ, ர.ஜடேஜா, ராடியா... இப்படி யாரையும் விடக்கூடாது.. குசும்பா இவங்கள பத்தி எதாவது எழுதிகிட்டே இருக்கனும் .. 100,125 வது பதிவோ , த்வீட்டோ நீங்களே உங்கள புகழ்ந்துக்கணும் ..Follow பண்றவங்க யாராச்சு உங்கள பாராட்டி மெசேஜ் அனுப்னா கூட அத ப்ளாக்ல போஸ்ட் பண்ணனும் .. சும்மா சும்மா யாருக்காச்சு நன்றி சொல்லிட்டே இருக்கனும் ..உங்க ட்வீட்ட RT பண்ணா கூட ...
9.வீட்ல திடீர்னு நெட் கனெக்க்ஷன் கட் ஆனா கூட , பக்கத்துக்கு வீட்லயோ , ஒரு பிரவுசிங் சென்டர்லையோ போய் பதிவ போட்டுடுங்க .. ஸ்லிப் ஆனிங்க செதறிருவீங்க... இப்போ இன்டலி, தமிழ் மனம்ன்னு ஓட்டு கேளுங்க .. இண்டி பிளாக்கர் ல கூப்டாக ,அலெக்ஸா ரேன்க் ல கூப்டாகன்னு இப்போ சீன் போடனும் ... ஒக்க்க்க்க்க்கே??
10. எல்லாத்துக்கும் மேல மிக முக்கியமாக , கஷ்டப்பட்டு ரெண்டு வருஷத்துக்குள்ள ஒரு புத்தகத்த வெளியிட்டரனும் .. இல்ல அட்லீஸ்ட் ஒரு புத்தகத்துக்கு விமர்சனமாவது எழுதனும்.. அதுவும் முடியலையா ஆனந்த விகடன் வலைபாயுதே ல ஒரு ட்வீட் ஆச்சும் இருக்கற மாதிரி பாத்துக்குங்க ... அது கூட முடிலையா . வேற யார்தயாச்சும் RT பண்ணிடே இருங்க .. அவனே தப்பா ஒரு தடவ உங்க பேர போட்ருவான் .. இதுல எந்த ஒரு விஷயமும் நடக்கலான.. தம்பி மன்னிச்சிகோங்க .. நீங்க ஒரு டம்மி பீஸு...
PS1: For whomsoever it may concern : JUST for ja.. Chi.. Fun. No offence meant. Watsoever. I Love you all bloggers.
PS2: Am no exception. Same pond. Same log :)
6 comments:
I am First. எப்புடி correcta puduchomla
இந்த ப்ளாக்கை நான் ஆமோதிக்கிறேன். என் ப்ளாக்-ஐ "venkiboy.blogspot.com" கூட இப்படி தான் ஸ்டார்ட் பண்ணினேன்.. :)
@Venkiboy
But i can't see your first post :)
சொல்லியிருக்குற எல்லாமே ஏற்கனவே செஞ்சுகிட்டு இருக்குற மேட்டர்கள் தான். சத்தம் போடாதீங்க...
sema ... sema ...
நல்ல உபயோகமான குறிப்புகள்!!!
10 commendments for bloggers!!!
Post a Comment