Friday, April 17, 2009

5 comments:

JSTHEONE said...

எண்ண‌ங்க‌ள் எண்ணில‌ட‌ங்கா;
எண்ண‌ங்களை வ‌குப்ப‌டுதலாம் என்றே ஆவ‌ல்;

குடும்ப‌ப் பெண்:
என்னைக் கொண்ட‌வ‌னை
உன் க‌ண்க‌ள் கொண்டு க‌ண்டாயோ?
அத‌ற்கே இந்த‌ வெட்க‌மோ?

ந‌டுத்த‌ர‌ வ‌ய‌து ஆண்ம‌க‌ன்:
சின்ன‌ஞ்சிறு செடியே!
கோடாகோடி ந‌ன்றிக‌ள் ;
இக்கால‌ பெண்க‌ளுக்கு
அச்ச‌ம் ம‌ட‌ம் நாண‌ம் க‌ற்றுத் த‌ர‌வே
உன‌து இந்த அவ‌தார‌ம்,
நீ ஓர் வாழும் உதார‌ணம் !

சிந்த‌னையாள‌ன்:
வ‌லிமை உள்ளோருக்கு
வ‌ண‌ங்குத‌ல் வாழ்விய‌ல்
வ‌குத்த‌து;
அத‌னை நிரூபிக்க‌ தானோ
ஆத‌வ‌னை க‌ண்ட‌தும் வ‌ண‌ங்கினாய்;
பிர‌மாத‌ம் !


Hi i jus gave my line in 3 perspectives.... hav a look...

i cant match u jus i gav a try....

Venkata Ramanan S said...

Good Try :)

Lakshmi said...
This comment has been removed by the author.
Lakshmi said...

தேசத்தின் தந்தைக் கொல்லப் பட்டதை - உன் தலை கிள்ளி பரப்பினோம் தலைமுறைகளுக்கு...

சிறு வயதின் சண்டைகளுக்கு - உன்
சிரம் வீழ்த்தி சமரசம் செய்தோம்...

மனதின் ஆரா இரணங்களுக்கு - உன் மரணம் விளைவித்து மருந்திடோம் ..

பக்கத்து வீட்டுச் சிறுமிக்கு - உன்னை
பரிசளித்து பேசத் துவங்கினோம்...

சமூக சேவை என்ற பெயரில் - உன்
சமூகத்தையே அழித்தோம் ....

புல்லுரிவிகள் களைய திறனின்றி - உன் பசுந்தளிர்கள் களைந்து நிறைவுற்றோம் ...

மனிதரின் விருப்புக்கும் வெறுப்புக்கும்
விளையாட்டுக்கும் வினைகளுக்கும்
விருந்தானாய் நீ ....

உன்னை பார்க்கும் நொடி
நினைவில் நிழலாடுகிறது
சிரம் தாழ்த்திய நிலையில்
சிலுவையில் இயேசுவின் உருவம் ...

Venkata Ramanan S said...

Wow!!! Great Lax !! :)