Tuesday, December 7, 2010

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ...








நான்காண்டு பிரிவுக்குப்பின்
உன் முகங்கூட மறந்து போன
மழை நாளொன்றில் ,

அறை மூலையின்
மதுக்கிண்ணத்தை தொடர்ந்து,
படுக்கையைத் தாண்டி
வழியத் துவங்கியிருக்கிறது
உனைப் பற்றிய ஞாபகங்கள் ...

கூரை தாண்டி வந்த
உனக்கு பிடித்த மழையின்
ஓர் துளியும் ,
உலகின் ஒட்டுமொத்த
துயரங்கள் தேக்கி ,
கன்னம் கடந்து வந்த
ஓர் சொட்டு கண்ணீரும் ,
ஒன்றாய் சேர்ந்து
இக்கவிதையில்
உன் பெயரை மட்டும்
அழித்துப் போகின்றன ..

நாட்குறிபேட்டில்
குறித்துக் கொள்கிறேன் ...

உன் திருமண நாளன்று
பேய் மழையொன்று பெய்ய,
மரங்களடர்ந்த ,
ஆளில்லா சாலையொன்றில்
பெருங்குரலெடுத்து
நான் அழ வேண்டும் ..

சத்தம் கேட்டு
நிமிர்ந்து பார்கிறேன் ..

வாலறுந்த
பல்லியொன்று
சுவற்றில் துடித்துக்
கொண்டிருக்கிறது..
உனை பிரிந்த
மறுநாளின் எனைப்போல...

நீயில்லா இரவொன்று ,
ஜன்னலுக்கு வெளியே,
நத்தையை போல்
மெதுமெதுவாய்,
ஊர்ந்து கொண்டிருக்கிறது ...

6 comments:

JSTHEONE said...

miga azhagaana varigal vaarthai vilaiyadalgal....

Vignesh said...

nice:-)

கிறுக்கன் said...

அருமையான வரிகள்..

sandakozhi said...

enakana varikal/ennudaia varigal

Sathyaseelan said...

உன் திருமண நாளன்று
பேய் மழையொன்று பெய்ய,
மரங்களடர்ந்த ,
ஆளில்லா சாலையொன்றில்
பெருங்குரலெடுத்து
நான் அழ வேண்டும் ..


அருமையான வரிகள் தோழா !!!

Venkata Ramanan S said...

அனைவருக்கும் _/\_ :)