Sunday, August 8, 2010

பேருந்தில் வந்த தேவதை ...11H
அசோக் பில்லர் முதல்
LIC வரையிலான
பேருந்துப் பயணம்...

வாரத்தில்
இரு முறையேனும்
உன்னைப் பார்த்து
விடுகிறேன்.

உறுத்தாத அழகு ...

காட்டன் சேலை...
கீற்று சந்தனம்..
ஒற்றை ரோஜா ...

பயணச்சீட்டு
வாங்கும் முன்
பரிதவிக்கும்
அந்த பத்து நிமிட
உந்தன் பதட்டத்தை
கண்டு சிரித்ததுண்டு ...

FM இல் ஏதேனும்
பாடலை கேட்கும்போது
சன்னமாக தலையாட்டிக் கொண்டே
கேட்பது உன் பழக்கம் ...

அதே பாடலை
தேடித் பிடித்து
உனையும், பாடலையும்
சேர்த்து ரசித்ததுண்டு ...

குழந்தைகள் என்றால்
கொண்டாட்டம் உனக்கு ..
சிரித்தால் சிரிப்பதும்,
அழுதால் அழுவதும் ...
அரைமணி நேர
திருவிழா அது...

ஏதேனும் ஒரு கோயில்
கடந்து சென்றால் ,
ஆட்காட்டி விரல் மடித்து
முத்தமிட்டு எதையோ
முணுமுணுப்பாய்..

ஓர் இறுதி ஊர்வலமோ,
ஓர் மருத்துவ விரைவூர்தியோ ,
ஓர் கண்பார்வையற்ற குழுவோ,
ஓர் கர்ப்பிணிப் பெண்ணோ,
ஓர் சாலையை கடக்கும் முதியவரோ,
வழியில் வராதவரை ..
நீ ஆறாம் முறை
அவ்வாறாக முத்தமிட்டவுடன்,
நான் இறங்க வேண்டிய
நிறுத்தம் வந்ததாக
அர்த்தம் ....

இவ்வாறாக
நகர்ந்து கொண்டிருந்த
வாழ்கையில் ...


Use "Open links in New Tabs" option for better results :)


12 comments:

Thiru said...

இன்று எழாவது முத்தத்தின் முடிவில்.......
என்றும் இல்லாமல் எட்டாவது முத்தமிட்டாய்....
என்னையும் அறியாமல் திகைத்தேன்.....

இறங்க வேண்டிய இடத்தை மறந்தேன்...
இதயத்தில் உன்னை சுமந்தேன்....

உன் உதட்டில் சிறிய புன்னகை....
வழக்கம்தான் என்றாலும்....
வாசனை மிகுந்தது.....
என்னை நோக்கி வந்ததால்......

உன் சிரிப்பு ஒரு அழகிய சூன்யம்....
இரண்டு நிமிடம் என் இதயத்தை இருக்குவதால்........

(மொக்கைய இருந்தால் மன்னிக்கவும்)
thiru

ரமணன்... said...

சென்னையை
விட்டுச் சென்ற
சில வருடங்களுக்கு
பிறகு, அறை நண்பனிடம்
தொலைபேசியபோது

நீ Foot board Romeo
ஒருவனை
காதலித்து,
கர்ப்பமாகி,
கைவிடப்பட்ட
கதை சொன்னான் ...

என் மனத்திரையில்
உனைப் பற்றிய
பிம்பமொன்று
அறுந்து விழுந்தது !!....
.
..

ரமணன்... said...

இங்கேயே
பிறந்து வளர்ந்த நம்
நான்கு வயது மகள்
தூக்கத்தில்
American English ல்
ஏதோ உளருகிறாள் ...

விழித்துப் பார்த்து
சிரித்துக் கொள்கிறோம்...

கனவை சொல்கிறேன் ...

"அடுத்த தடவ
இந்தியா போகும்போது
கண்டிப்பா 11H ல ச்சும்மா
ஒரு தடவ போகணும் டா "
என்கிறாய்...

சின்னப் புன்னகையுடன்
உனைப் போலவே
சன்னமாக தலையாட்டுகிறேன் ...!.

ரமணன்... said...

சட்டென ஒரு நாள்
மணமுடித்து,
அலுவலகம் மாற்றி ,
வேறொரு பேருந்தில்
செல்லத் துவங்கினாய்...

உன் இடத்திற்கு
வந்த இன்னொருவள்
நேராக முத்தமிடாமல் ,

நெற்றி, மேல்வயிறு
இட,வல மார்புகள்
இதே வரிசையில்
தொட்ட பின்னர்
ஆட்காட்டி விரலை
முத்தமிடுகிறாள்....

பெயர் ஏதோ
ஜாஸ்மினாம் ...

அதே படிக்கட்டில்
தொங்கிக்கொண்டு
நான் !!.

ஆயில்யன் said...

முடிவு 3 தான் டெரரா இருக்கு அதையே செலக்ட் பண்ணிக்கிடலாம் :)

ரமணன்... said...

@ஆயில்யன் TERROR :)

Saravana kumar said...

Decision 3 is Nice

பார்வையாளன் said...

fantastik... பிரமாண்டத்தை நம்பி கதையை கோட்டை விடும் இயக்குனர்கள் போல் அல்லாமல், கவிதையை கோட்டை விடவில்லை, யுக்தியை நம்பி..
அருமை

ரமணன்... said...

நன்றி பார்வையாளரே :)

King Vishy said...

Wow nice one!! Kavidhaiyum super.. triple climax concept-um super!!

Totally with paarvaiyaalan(r)..

ரமணன்... said...

Thanks Vishy... anniku 3 beer adichadhaala 3 climax.. 5,6 nnu poirundhadhu na ennagirukkum ? :) LoL

Manivannan said...

Kalakkuringa Ramanan.. Ella kavithaiyum nalla irukku.. Good to see this.. Keep rocking..