Wednesday, April 6, 2011

The Cup of Joy!


February, 2001. I was in my Tenth standard. Second revision, English paper I. I was asked to write a summary on India’s famous victory at the Lord’s. Titled “The Cup of Joy” with a skyblue sketch pen the synopsis was for about ten pages in contrast to the original lesson which ran for only three. It was one of the most satisfying moments in the school life, When I came out of the exam hall.

Ten days later my English teacher distributed the answer papers in the classroom. I was given 6 on 10 for that essay. Three full pages were ripped off diagonally. Dejected. In the next few minutes, I was in the staff room.

‘What’s this?’ he asked , “The four West indies greats : Joel Garner, Andy Roberts, Michael Holding and Malcolm Marshall” I answered.

‘Not even mentioned in the book’

‘So what? They played’ was the reply.

I was such a maniac in school days.

Sunday, February 20, 2011

யாரோ ஒருவன்...




அலுவலகம் செல்லும்
நாள்தோறும்
தோள்பையில்
மடிக்கணிணியுடன்
சில முகமூடிகளையும்
எடுத்துச் செல்கிறேன் ...

வழியெங்கும் மழை..
நனைந்தழிந்து போன
தன் முதற்கோலத்தை
வெறித்துப் பார்க்கிறாள்
சாலையோரச்
சிறுமி ஒருவள் ...

அகண்ட பாத்திரமொன்றில்
சேர்ந்திருந்த மழைநீரை
ஓங்கி அறைந்து
அழுதிருந்தாள்..

கருணையே வடிவான
முகமொன்றை
தேடியணிந்தேன்..
காகிதமொன்று
கத்திகப்பலானது ...
சிரித்தாள்..
சிரித்தேன்..
நகர்ந்தேன்.

வீதி வந்த
வயதான தாயொருத்தி
கையேந்தினாள் .
காசு வேண்டாம் , சோறு வேணும்
என்றாள்..
மணிக்கட்டு 8:30
என்றது..

இறுக்கமான முகமொன்றை
அணிந்துக்கொண்டு
இருபது ரூபாய் தந்து
அவ்விடம் தொலைந்தேன்..

பத்தடிக்கு அப்பால்
அதேபோல் இன்னொரு
முதியவர்..
மாதக் கடைசியாதலால்
கண்டும் காணமல்
அலட்சிய முகமொன்றுடன்
கடந்து போனேன்...

நேற்று முன்தினம்,
குடிபோதையில்
ஐம்பது ரூபாய் சொச்சம்
இனாம் கொடுத்த ,
சலாம் வைத்து
தலை சொரிந்த
அஞ்சப்பர் மீசைக்காரன்
நினைவில் வந்து போனான்..

அலுவலகம்
நுழைந்தவுடன்
பொய்யாய் புன்சிரித்த
முகமொன்று
மதியம் வரை
தேவை பட்டது ...

அதுவரையில்
கண்ணீர் சிந்தும்,
காது வரை சிரிக்கும்,
கன்ன மேடுகள் துடிக்கும்,
பாசம் புரிபடும்,
சிறுமை கண்டு கொதிக்கும்,
பாதம் பார்க்கும்,
செவிகள் விரிந்த,
கண்கள் சிவந்த,
தாழ்ந்து நடக்கா,
கீழோர்க்கஞ்சா முகங்கள்
என் சிறு பையினுள்
ஒன்றுடன் ஒன்று
என்ன பேசிக்கொண்டன
என்பதை நானறியேன்..

வழியில் கண்ட
முதிர் பெண்ணொருத்தி
இறக்கி கட்டிய சேலையும்,
இன்ன பிற
கவனசிதறல்களையும்
சுமந்து கொண்டு
கடந்து போனாள்...

சற்று நேரத்தில்
அலவலக ஒதுக்கத்தில்
முகம்கழுவி
கண்ணாடிமுன்
நிமிர்ந்து பார்கிறேன் ..

நான் இதுவரை கண்டிராத
யாரோ ஒருவன்
சிரித்தபடி
கடைவாயில்
காமம் ஒழுக
நின்றிருந்தான் ...!


Thursday, January 20, 2011

தமிழில் பிரபல பதிவராவது எப்படி ?? பத்து யோசனைகள் ...





1.அம்மா அப்பா வச்ச பேர மொதல்ல மறங்க ..புனை பெயர் ஒன்ன தேடி புடிங்க . தமிழ், ஆங்கிலம், ஹிந்தி கலந்தவாறு. சற்றே Fancyயாக இருந்தால் சாலச் சிறந்தது. முன்னாடி ,பின்னாடி, நடுவுல ரைட்டர் சேத்துக்கலாம்.

2.முதற்படியாக கவிதைங்கற பெயரில் எதாவது எழுதி புள்ளையார் சுழி போடணும்.. அப்புறம் இருக்கிற எல்லா தமிழ் திரட்டிகள்ளேயும் மாத்தி மாத்தி பதிவு செய்யணும் .. அம்மா தாயே ஓட்டு போடுங்ககிறதெல்லாம் அப்போறம்.

Saturday, January 15, 2011

தேவதை பிடித்த பட்டாம்பூச்சி ...




பரண் மீதிருக்கும்
பழைய புத்தகமொன்றில்
இன்னமும்
உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறது ,

என் தேவதை
பிடித்த
பட்டாம்பூச்சியொன்று...

ஒட்டடை..




வீட்டை
இடுப்பொடிய
சுத்தம் செய்து
களைத்து
மெத்தையில்
சரிந்தவுடன் ,

நேரெதிரே தெரியும்
விட்டுப்போன
ஒட்டடை போல
உன் காதல் .!!

ஸ்பெஷல் தரிசனம்




கோரிக்கைகள்
ஒன்றாயிருப்பினும் ,
பணம் படைத்தவர்களுக்கு
மட்டும்
ஸ்பெஷல் தரிசனம்
தரும் கடவுளே,

உனக்கும்
விலைமகளுக்கும்
என்னவே
வித்தியாசம்??


Tuesday, December 7, 2010

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ...








நான்காண்டு பிரிவுக்குப்பின்
உன் முகங்கூட மறந்து போன
மழை நாளொன்றில் ,

அறை மூலையின்
மதுக்கிண்ணத்தை தொடர்ந்து,
படுக்கையைத் தாண்டி
வழியத் துவங்கியிருக்கிறது
உனைப் பற்றிய ஞாபகங்கள் ...

கூரை தாண்டி வந்த
உனக்கு பிடித்த மழையின்
ஓர் துளியும் ,
உலகின் ஒட்டுமொத்த
துயரங்கள் தேக்கி ,
கன்னம் கடந்து வந்த
ஓர் சொட்டு கண்ணீரும் ,
ஒன்றாய் சேர்ந்து
இக்கவிதையில்
உன் பெயரை மட்டும்
அழித்துப் போகின்றன ..

நாட்குறிபேட்டில்
குறித்துக் கொள்கிறேன் ...

உன் திருமண நாளன்று
பேய் மழையொன்று பெய்ய,
மரங்களடர்ந்த ,
ஆளில்லா சாலையொன்றில்
பெருங்குரலெடுத்து
நான் அழ வேண்டும் ..

சத்தம் கேட்டு
நிமிர்ந்து பார்கிறேன் ..

வாலறுந்த
பல்லியொன்று
சுவற்றில் துடித்துக்
கொண்டிருக்கிறது..
உனை பிரிந்த
மறுநாளின் எனைப்போல...

நீயில்லா இரவொன்று ,
ஜன்னலுக்கு வெளியே,
நத்தையை போல்
மெதுமெதுவாய்,
ஊர்ந்து கொண்டிருக்கிறது ...

Sunday, August 8, 2010

பேருந்தில் வந்த தேவதை ...



11H
அசோக் பில்லர் முதல்
LIC வரையிலான
பேருந்துப் பயணம்...

வாரத்தில்
இரு முறையேனும்
உன்னைப் பார்த்து
விடுகிறேன்.

உறுத்தாத அழகு ...

காட்டன் சேலை...
கீற்று சந்தனம்..
ஒற்றை ரோஜா ...

பயணச்சீட்டு
வாங்கும் முன்
பரிதவிக்கும்
அந்த பத்து நிமிட
உந்தன் பதட்டத்தை
கண்டு சிரித்ததுண்டு ...

FM இல் ஏதேனும்
பாடலை கேட்கும்போது
சன்னமாக தலையாட்டிக் கொண்டே
கேட்பது உன் பழக்கம் ...

அதே பாடலை
தேடித் பிடித்து
உனையும், பாடலையும்
சேர்த்து ரசித்ததுண்டு ...

குழந்தைகள் என்றால்
கொண்டாட்டம் உனக்கு ..
சிரித்தால் சிரிப்பதும்,
அழுதால் அழுவதும் ...
அரைமணி நேர
திருவிழா அது...

ஏதேனும் ஒரு கோயில்
கடந்து சென்றால் ,
ஆட்காட்டி விரல் மடித்து
முத்தமிட்டு எதையோ
முணுமுணுப்பாய்..

ஓர் இறுதி ஊர்வலமோ,
ஓர் மருத்துவ விரைவூர்தியோ ,
ஓர் கண்பார்வையற்ற குழுவோ,
ஓர் கர்ப்பிணிப் பெண்ணோ,
ஓர் சாலையை கடக்கும் முதியவரோ,
வழியில் வராதவரை ..
நீ ஆறாம் முறை
அவ்வாறாக முத்தமிட்டவுடன்,
நான் இறங்க வேண்டிய
நிறுத்தம் வந்ததாக
அர்த்தம் ....

இவ்வாறாக
நகர்ந்து கொண்டிருந்த
வாழ்கையில் ...


Use "Open links in New Tabs" option for better results :)


Tuesday, August 3, 2010

Sachin Ramesh TONdulkar




The inaugural speech would have been proof read at least a hundred times before Obama delivered it in the White House... Kamal Hasan would have used Glycerin and several re-takes for that Mahanadi Sona Gazi ... We never knew how many were scrapped,before Leonardo came up with the final Monalisa...My stupid boss runs his silly PPTs several times before presenting it to a drove of high paid asses. My backspace suffered a lot for the last few lines...Unlike all of us, Sachin Tendulkar lives in 'Real - Time' . Just a frac of a sec err. A couple of stumps & a million hearts will be dislocated. That makes him so special. Wishing him on his 169th Test appearance ...




A lethal Waqar left him bleeding on his debut…“Go back to your country and suck Milk” read a banner… He denied ...And became a God..The very spectator may seldom witness a test match @ his home and is begging for England’smercy after 1947….#Irony #LifeIsLikeThat.



I remember my good old school days, when Anwar and Sachin raced each other in ODI tons.. 12..13..14..Our classroom desks would still read...Halfway down their careers, the former decided to preach while the later became a 'God' himself. And Mr.Ponting , you tried to prove something in Tests ...But.....



Endulkar?.. Big Elephant in the dressing room whom none wants to talk about ?.. Mirror Mirror?.. Given his form in the last couple of years , Every #Sachin fanatic would now love to have 1000 middle fingers ..!!



Stop the homework,switchoff the TV,go & play!Leave the TV room,go for a fag!!Logged of the PC walking towrds Breakout Area!!!Tradition Continues....#Sachinon90s

ツ

Monday, July 26, 2010

நாணயம் ...!





மும்பை - கோவை
ரயில் பயணத்தில்
அவரை சந்தித்தேன் ...

தமிழ், ஆங்கிலம்
ஹிந்தி , தெலுகு
சரளமாய் பேசினார் ...

ரயில்வே துறையின்
அலட்சியம் தாண்டி
தமிழக அரசியல்,
உலக பொருளாதாரம் ,
ஆன்மிகம் என
வளர்ந்தது பேச்சு ...

புத்தகங்கள்
குடிப்பவர் போலும்..
விரல் நுனிவரை
வளர்ந்திருந்தது
ஞானம் ...

பிரபாகரன் பற்றி
பேசும் போது
கண்கள் பனித்தன ...

"புரட்சியாளர்கள்
புதைக்கப்படுவதில்லை ..
விதைக்கப்படுகிறார்கள் "
இலங்கை ஒரு
இஸ்ரேல் ஆகும்
என்றார்...

என் ரசனை
அறிந்தவராய்
"தாஸ்தாவெஸ்கி படி
உனக்கு பிடிக்கும்"
என்றார்..

தான் பிக்காசோவின்
பரம காதலன் என்றார்..
சகீர் ஹுசைனை
கெட்ட வார்த்தைகள் கொண்டு
திட்டினார்...

இளையராஜா தான்
இசைக்கடவுள் ..
கவாஸ்கர்
கிரிக்கெட் ஜீனியஸ் என்றார்..
மற்றதுகள் எல்லாம்
பதர்கள் என்றார் ..

கமலின் மன்மத அம்பு..
ட்விட்டரில் ரைட்டர் பேயோன்
ஓபாமாவின் வெளியுறவுக் கொள்கை ...
One Novel Wonder - அருந்ததி ராய்...
ஸ்பெயினின் தடுப்பாட்டம் ..

என்று இன்னும் என்னென்னமோ பேசினார்..

நேரமறியாது தூங்கிப்போனோம் ..

சேலம் வந்ததும்
யாரோ எழுப்பிவிட..
அவசரமாக Upper Berth த்திலிருந்து
கீழிறங்க முனைகையில் ..

நேற்றிரவு நான் தொலைத்து
இருவருமாக தேடிய
ஐந்து ரூபாய்
நாணயமொன்றை
காலால் மிதித்து
மறைத்து..
ஜன்னல் பக்கம்
வெறித்துப் பார்த்துகொண்டிருந்தார்...

"சார் சார்" என்று பல முறை
கூப்பிட்டு பார்த்தும்
நான் இறங்கும் வரை
அவர் என் பக்கம்
திரும்பவேயில்லை ....

Tuesday, July 13, 2010

ஒற்றை ரோஜா...


எண்பதுகளில் வந்த
முரட்டு உருவமொன்று
சடன் பிரேக் போட்டு
சற்றே லாவகமாக
வளைந்து செல்கிறது ....

பில்லியனில்
உட்கார்ந்திருக்கும்
புது மனைவி
கணவனின் காதில்
எதையோ
கிசுகிசுக்கிறாள் ...

மாநரக ஓட்டுனர்கூட
Lane Discipline ஐ
சிறிதே மறந்து
இரு சக்கரங்களுக்கு
இடையே விட்டு
கவனமாக
ஓட்டிச் செல்கிறார் ..

சாலையின் அந்தப்பக்கம்
பைத்தியம் என்று
முத்திரை குத்தப்பட்டவர்
கண் இமைக்காமல்
கூரிய பார்வை
பார்க்கிறார்...

நெடுஞ்சாலையில்
விழுந்து கிடக்கிறது
சற்றுமுன் பூத்தவோர்
ஒற்றை ரோஜா..

நான் இதுவரை கண்டது
பழைய காதலின்
மிச்சமா??
மனிதத்தின்
எச்சமா ?

விடை தெரியாமல்,
திரும்பிப் பார்த்துக்கொண்டே
கடந்து போகிறேன்
நானும் !!!....



Monday, July 12, 2010

என் பார்வையில் மதராசப்பட்டினம் ...





Another saturday night.. Same old friends... Tens of texts,calls and hundreds of thoughts... Literally 'Vijay' & 'Mallaya' were battling hard.. Very rarely, At the end of the day a good movie will win over your draught beer. Madharasapattinam was one such! KF strong wasn't missed much..Marlboro lights after the movie were awesome !

One more period film.. Was little worried about 'Kalpathi' bros when their names were flashed on the title cards. No idea about the whereabouts of R.Ravindran now.




Friday, July 9, 2010

பழைய காதல் !!



திருமண மண்டபங்களில்
விளையாடித் திரியும்
சின்னஞ்சிறு குழந்தைகளின்
காலில் மிதிபட்டு
உயிரிழக்கிறது
ஏதேனும் ஓர்
பழைய காதல் !!

ஈரம் ..




இப்போது பெய்யும் மழையில்,
எப்போதோ பெய்ந்த மழையில்
அவளோடு நனைந்த ஈரம்

கோபங்கள் ..



கன நேர கோபத்திற்கு பிறகு ,
மிதித்தது குழந்தையென அறிந்து
தோன்றும் புன்முறுவலை
போன்றதுதான் -உன் மீதான
என் அனைத்து கோபங்களும்!

Monday, June 7, 2010

நெடுநாளைய ஏக்கம் !!






நிலா மழையில்
நனைந்த உன்னை
முதன் முதலாய்
பார்த்த போது

சட்டென
தீர்ந்தது...

மகேந்திர வர்மனின்
சிற்பமொன்றை
பௌர்ணமியில்
பார்க்கும்
நெடுநாளைய
ஏக்கமொன்று !!


Flickr Link

Thursday, April 1, 2010

ஊடல் தோற்பது !!




ஜன்னலின் பக்கம்
எதேச்சையாக
கடந்து போன போது ..

நீலநிற சிவனொருவன்
தலைவிரித்து ஆட .
வெட்டின
மின்னலுக்கிடையே,

இடமிருந்து ஒரு
ஆழிப் பேரலையும் ,
வலமிருந்து ஒரு
எரிமலை குழம்பும்
ஒன்றாய் சேர்ந்து,
பூமி பிளந்து ,

சிறிதொரு சப்தமின்றி,
பேரமைதியுடன்
அழிந்து கொண்டிருந்தது
என் உலகம் ...

திடுக்கிட்டு
விழித்துப் பார்க்கையில்

"உன்னுடன் கடைசியாக பேசி
இத்தோடு 57 மணிநேரங்கள்
ஆகிவிட்டன "..

கண்களுக்குள் அலைபாயும்
கருவிழிகள் ...
மேலுதட்டு வியர்வை
துளிகளுடன் ,
உனக்கான
இதுபோன்ற கனவில்
நீ !!

மூச்சுதொடும் தூரத்தில்
நெற்றி விழி நாசி அதரம்
கடந்து வந்து,

இம்முறையேனும்
ஊடலில்
ஜெயிக்க எண்ணி,
அதற்கு மேலும் தொடர
மனமின்றி ,

தலையணை கட்டி
தூங்கிப் போகிறேன் ..!!

Monday, March 29, 2010

என் பார்வையில் அங்காடித் தெரு ....




எந்தவொரு நல்ல படத்தை பார்த்து முடித்த பின்னும் "இத இன்னும் கொஞ்சம் நல்ல எடுத்திருக்கலாம் " என்று எப்போதுமே நினைத்ததுண்டு . ஆனால் இந்த கதைக்களத்தை கொண்டு கண்டிப்பாக இதை விட ஒரு சிறந்த படத்தை யாராலும் கொடுத்திருக்க முடியாது.. பூச்செண்டேல்லாம் பத்தாது ... ஒரு பள்ளத்தாக்கே வேண்டும் ... வாழ்த்துக்கள் வசந்தபாலன் ...!!


Monday, March 1, 2010

Happy 200 !!




A Tweet20 Non-Fiction #ImeandSachin


#137 Wills WC96 …1st time am seeing him bat... Next door annas distributed sweets. I knew dat b4.. Actually watched him for that.. #Alppam

#31 Prasad - Aamir rivalry..Felt d heat..Heard cousin Bad mouthin...#Shocked..Yells of Joy ,Chokos and Crackers..Entire Village was happy..

#65 Stumped n Gone !!! Infamous Eden Garden... Kambli cries..#Shocked .. India dint sleep well..


Friday, January 15, 2010

என் பார்வையில் ஆயிரத்தில் ஒருவன் ...






இன்னும் சிறிது நாட்களில் "நம்ம ஊரு Apocalypto ", "தமிழில் ஒரு Lord of The Rings ", "அவதார் படத்தின் தழுவல்" என்பன போன்ற விமர்சனங்கள் எழலாம் ...

கிபி 1200 களின் போரின் போது தப்பிச் சென்று , வியேட்நாம் தீவில் ஒளிந்த சோழ மன்னனின் வாரிசை தேடி போகிறாள் பாண்டிய வம்சா வழியில் வந்த இக்கால பெண்ணொருத்தி... இது தான் படத்தின் Single Line... என்? எதற்கு? எப்படி? .... விடைகளை வெள்ளித்திரையில் காண்க ....