காற்றில் தவழ்ந்து வந்த ஒரு பழுப்படைந்த டைரிக்குறிப்பு,
பழைய பள்ளி நண்பனின் அலைபேசி உரையாடல்,விட்டத்தில் சிறு முட்டைகள் கொண்ட பறவைக் கூடு,
கண் காணா இடத்தே கசிந்து வந்த ஒரு கண்ணதாசன் பாடல்,
"எல்லாம் சில காலம் இதுவும் கடந்து போகும்" என்பது போல் ஒரு வரி,
எதிர்பாராது அழுதுகொண்டே அறையுள் வந்த அடுத்த வீட்டுக் குழந்தை,
வழக்கமாய் வரும் சாயுங்கால பால்காரன்,
இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்திருந்தாலும்
அந்த தற்கொலை தடுக்கப்பட்டிருக்கக் கூடும்.
அந்த தற்கொலை தடுக்கப்பட்டிருக்கக் கூடும்.
No comments:
Post a Comment