Monday, March 29, 2010

என் பார்வையில் அங்காடித் தெரு ....




எந்தவொரு நல்ல படத்தை பார்த்து முடித்த பின்னும் "இத இன்னும் கொஞ்சம் நல்ல எடுத்திருக்கலாம் " என்று எப்போதுமே நினைத்ததுண்டு . ஆனால் இந்த கதைக்களத்தை கொண்டு கண்டிப்பாக இதை விட ஒரு சிறந்த படத்தை யாராலும் கொடுத்திருக்க முடியாது.. பூச்செண்டேல்லாம் பத்தாது ... ஒரு பள்ளத்தாக்கே வேண்டும் ... வாழ்த்துக்கள் வசந்தபாலன் ...!!




நான் வசிக்கும் அசோக் நகர், தினம் தினம் வளைய வரும் தி. நகர் .. இவற்றை மையமாக கொண்டு இயல்புக்கு வெகு அருகாமையில் அமைந்த கதையாதலால் மிகவும் பிடித்திருந்தது... யாரிந்த மகேஷ், ?? நடிக்க தெரியவில்லை...வாழ்ந்திருக்கிறார் ... நாயகனுக்கு நெருங்கிய என் நண்பன் ஒருவனின் முகச்சாயல் ..சற்றே ஈர்ப்புடன் ரசிக்க முடிந்தது ....நாயகியாக " நெசமாத்தான் சொல்றியா?" அஞ்சலி ... கற்றது தமிழில் தொடங்கியவர் அப்படியே இன்னமும் ரசிக்க வைக்கிறார் ....

படம் தொடங்கிய முதல் இரு நிமிடங்களிலேயே தெரிந்து விடுகிறது இது வெறும் சினிமா இல்லை என்று ..."I wanna make Love to you" என்பன போன்ற கிளிஷேக்கள் இல்லை ..பஞ்ச் வசனங்கள் , பறந்தடிக்கும் சண்டைகள் , டாடா சுமோக்கள் இல்லை ..இரு சராசரி மனிதர்களும் , அவர்களை சுற்றி பின்னப்பட்ட கதையும் ... படத்தின் இறுதியில் இருக்கும் பெருஞ்சோகத்தை , அந்த கால் மிதித்து விளையாடும் சின்ன சண்டையில்
காண்பித்திருக்கிறார் ... மலைப்பாக இருக்கிறது !!

நட்பு, காதல், பாசம் எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள் ...படம் முழுக்க சின்ன சின்ன காட்சிகள் , ரசிக்கவும் வைக்கின்றன ... அதிர்ச்சியும் தருகின்றன ...

வெள்ளிக்கிழமை காலை காட்சி ... அதிகமாய் கூட்டமில்லை ..

" என் அப்பா என்ன ஒரு துரும்ப கூட தூக்க விட மாட்டாரு தெரியுமா " ஏதோ ஒரு இடத்தில நாயகன் சொல்கிறான்..

BSNL Bill , Aircel Office, SETC முன்பதிவு .. இன்னபிற வீட்டு வேலைகளை முடித்து தியேட்டர் வந்திருந்தேன் . 25 வருடங்களாக உண்மையில் என் அப்பாவும் அப்படித்தானிருந்தார் . நான்கு மாதங்களுக்கு முன் விபத்தொன்றில் அடிபடும் வரையில் . இப்போது வீட்டில் முடங்கி கிடக்கிறார் .. சமயங்களில் என் பெயர் கூட அவருக்கு நினைவிருப்பதில்லை .. இரவு நான் வீடு வந்து சேர்ந்தால் , அடுத்த காலை அவருக்கு அது நினைவிருகிறதா பார்க்கலாம் என்று அம்மா பரீட்சை வைக்கிறார்கள் ... அடுத்த அறையில் நான்..முன் அறையில் எந்த சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருக்கிறார் ..

கன்னமேடுகளை நனைக்கிறது முதல் கண்ணீர் .. அதற்க்கு பிறகு வந்த பத்து நிமிடங்கள் ஞாபகமில்லை ..

திரையரங்கில் இருந்த சொற்ப நபர்களும் படம் நெடுக ஆங்காங்கே கை தட்டுகின்றனர் ...
" இல்ல Bhaai !! நான் இப்டி தான் கொழந்த வேணும்னு வேண்டிகிட்டேன் Bhaai !" என்று அந்த பெண் சொல்லும் போது பின்னால் சிலர் எழுந்து நின்று கை தட்டுகிறனர். மனிதனாய் பிறந்த எல்லார் மனதிலும் ஈரமாய் இன்னும் மிச்சமிருக்கிறது கைப்பிடி மனிதம் ! "

பக்கத்திலிருந்த சிறுவயது பள்ளிநண்பன் கூட " உலகத்துல ஆறுதல்ங்ற வார்த்த மட்டும் இல்லனா என்னாகும் ?" என்கிறான் ... எவ்வளவு உண்மையான வரிகள் ...
.
அப்புறம் அந்த இன்னொரு ஜோடி ... அவன் முகத்தில் வாழ்கையை பற்றிய பயம் ! அவள் முகத்தில் காதலின் வலி ! பத்து நிமிடமே வந்தலும் மனதை பதம் பார்கின்றனர் ...

ஒரு ஸ்ட்ராபெர்ரி பழம், ஒரு மர அடிஸ்கேல் , ஏன் ஒரு கட்டண கழிப்பறை கூட படத்தில் நடித்திருக்கிறது ..

மனதை கலைத்துபோடும் பாடல் வரிகள் ..

"கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது வருகிற வாசனை நீயல்லவா !
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய மொழியல்லவா ?"
கல்லும் மண்ணும் வீடுகளில்லை ... அன்பின் வீடோ அழிவது இல்லை ...
வெறும் தரையில் படுத்துக் கொண்டு விண்மீன் பார்ப்பது யோகமடா...
உன் மடியில் இருந்ததால்.... வாழ்கையில் எதுவும் தேவை இல்லையடி ...

உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் ..
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்..
உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை ...
அதை தாண்டி ஒன்றுமே இல்லை ...

சற்றே சலனத்துடன் தான் அனைவரும் திரையரங்கை விட்டு வெளி வருகின்றனர்....

வெளியே வந்ததும் நான் பார்த்த முதல் காட்சி .. ஒரு பிச்சைகாரன் ரோட்டோரம் இருக்கும் எச்சில் இலைகளை பிரித்து கொண்டிருந்தான் ..வைத்த கண் வாங்காமல் பார்த்ததில் இரு சிகரெட்டுகள் தீர்ந்து போயிருந்தன ..

அடுத்த முறை சேலை எடுத்து போடும் பெண்ணின் புன்முறுவலுக்கு பின்னால் இழையோடும் சோகம் உங்களுக்கு புரியும்... நேசமாய் புன்னகைப்பீர்கள் !

ரங்கநாதன் தெருவில் 'டோரா டோரா' விற்பவனையும் , 'வீட்டினுள் நட்சத்திரங்கள்' கொண்டு வருபவனையும் இரு வினாடிகலேனும் அதிகமாய் பார்ப்பீர்கள் ... அதுவே இப்படத்தின் உண்மையான வெற்றி !!

அவதாருக்கு ஆறு ஆஸ்கர்கள் கிடைத்திருக்கலாம் .... இப்படம் பார்க்கும் அந்த சராசரி மனிதர்களின் விழி நனைக்கும் ஒவ்வொரு துளி கண்ணீரும் வசந்தபாலனுக்கு ஆஸ்கர் தான் !!



16 comments:

JSTHEONE said...

Machi my hats off to vasantha balan and thnks to u..

i didnt see movie yet.. but i can guess the hard feel that movie can make on us..

really this are energisers for tamil cinema...

i saw few scenes... chanceless..

Anjali rocks... :D...

1ce again i wanna say i will pray for ur father speeedy recovery...

thnks for the blog.....

Karthick Vikraman said...

Innum padam parkla... But feel panna mudinchadhu un blog partha udane.....

Everything is good ! (about ur blog..) Specially,
அவதாருக்கு ஆறு ஆஸ்கர்கள் கிடைத்திருக்கலாம் .... இப்படம் பார்க்கும் அந்த சராசரி மனிதர்களின் விழி நனைக்கும் ஒவ்வொரு துளி கண்ணீரும் வசந்தபாலனுக்கு ஆஸ்கர் தான் !!

indha varikal la ninnuta da :)

R Srikkant said...

I ll defly go and watch this da! Wont miss it after all that u ve said! I am sure dad ll recover very soon! My prayers wit him!

Unknown said...

machi blog supera erukuthuda......
etha vasanthabalan padikanum unmiyana rasigargalatherijikuvaru.......

gud work da......

Anonymous said...

na tis s kavin.... saw ur blog thru akka's mail.... engaluku ellam anuppamatingla??? chumma!!!
did'nt see the film nd had no idea of seein it but now i'm sure 'ill see tis film....
mama 'll recover soon na nd sure very soon u'll get scoldings from him.....

Unknown said...

Greatly appreciated on your comments abt d film. Really njoyed, wanna see the movie soon."was in tears after read few line-u muz b knwng "Y""..dont wry chap... v r alwys wid u.....

Diz story would lend itself well to serialization.... -- Sathu

Venkata Ramanan S said...

@JSTHEONE : Thanks J

@Karthik : Naa Nikkaren Nikkaren Nikkaren :)

@Sri : Thanks da

@anand : kashtapattu tamil eludirukka.. :)

@Kavin : May b coz u r still seen as a kid in d family.. nee col la enena panranu enakku thaana theriyum... All Details.. I know :).. Ive a spy da.. Beware

@MBT : Thanks for being der dude

Venkata Ramanan S said...

Second time last night....ஒரு படத்தை இரண்டாம் முறை பார்க்கும் போதும் இவ்வளவு ரசித்து பார்த்தாய் இன்று வரை ஞாபகமில்லை .....

GNU / Linux said...

Your review is too touching man.
i have seen this film again by your wondedrful words.

GNU / Linux said...

this is 100% true


அவதாருக்கு ஆறு ஆஸ்கர்கள் கிடைத்திருக்கலாம் .... இப்படம் பார்க்கும் அந்த சராசரி மனிதர்களின் விழி நனைக்கும் ஒவ்வொரு துளி கண்ணீரும் வசந்தபாலனுக்கு ஆஸ்கர் தான் !!

Venkata Ramanan S said...

@GNU/Linux

Hey.. Thanx Man :)...

சரண் said...

படம் பாத்து 3 நாள் ஆச்சு பாஸ்.. இன்னும் அழுதுட்டிருக்கேன்...
அப்பாடா இப்பவாவது இப்படி ஒரு படம் வந்ததேன்னு ஆறுதலா இருக்கு...

King Vishy said...

This is one movie I have wanted to watch going by all the reviews I have read.. But I have been pushing the 'watching' as much away as possible.. Padam paakkaamale azhudhuruven pola irukku.. The feelers I have got about the movie are enough for me to understand what it's abt.. not sure if am 'ready' to watch the movie.. (veyyil kooda innum paakkala)..

BTW didn't know about your Dad da!! Strong prayers for him from the heart.. He will sure get back as you knew him all these years..

Venkata Ramanan S said...

@ சரண்

:)

@King Vishy

Thank you.. It was lot better than veyil...Was taken aback.. such a blow.. Will easily make into top5 tamil films i've ever watched... Must see

Maha said...

Though its a little late, I still want to comment on it.

When I read your review after watching the movie, I could really appreciate what you are going through.. Especially about the dad's part.

He would be proud of you man...

You really have the knack of stimulating those feelings by your writing. Keep up the good work!

Venkata Ramanan S said...

I don ve anything as a reply except for a :)